பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீராங்கனை மீராபாய் சானு தவற விட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலக புகழ்பெற்ற இத்தொடரில் மொத்தம் 10500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டள்ளனர் . இதில் இந்தியா சார்பில் 100க்கும் பெற்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.
தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து பாதகத்திற்காக போராடிய மீராபாய் இறுதியில் 4வது இடம்பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டார்.
Also Read : முஸ்லிம்களின் சொத்துக்களை நிர்வகிக்க நினைப்பது தவறு – அரசுக்கு அறிவுரை கூறிய ஈபிஎஸ்..!!
3வது இடம் பிடித்த தாய்லாந்து வீராங்கனை 200 கிலோ எடையை தூக்கிய நிலையில், மீராபாய் 199 கிலோ எடையை தூக்கியுள்ளார்.
இதன்மூலம் வெறும் ஒரு கிலோ எடையில் பதக்க வாய்ப்பு பறிபோனதால் மீராபாய் சாணுவுடன் சேர்ந்து நாட்டு ,மக்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர் .
நடப்பு தொடரில் தோல்வியை சந்தித்துள்ள மீராபாய் சானு கடந்த முறை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திருந்தது குறிப்பிடத்தக்கது.