Anti-corruption police raided : கடந்த 2015 முதல் 2017ம் ஆண்டு வரை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்படி உழவர்களுக்கு வழங்கப்பட்ட விபத்து இழப்பீடு,
இயற்கை மரணம், திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்ற திட்டங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு மற்றும் கையாடல் நடந்துள்ளது.
இது தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது (Anti-corruption police raided).
இதையும் படிங்க : June 15 Gold Rate : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!
அதையடுத்து அப்போதைய சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தரராஜன், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தேவிகா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட தாதம்பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகியோர்கள் மீது விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில், 8 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு ஊழியர் நகர் மற்றும் மந்தக்கரை கீழ செட்டி தெருவில் உள்ள வட்டாட்சியர் சுந்தரராஜன் வீடுகள்,
செல்வராஜ் நகரில் உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் தேவிகா வீடு மற்றும் வளவனூர் தாதம்பாளையத்தில் உள்ள இடைத்தரகர் முருகன் ஆகியோரது வீடுகளில் கடலூர் மற்றும் விழுப்பரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 4 குழுக்களாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.