பொறையார் வி.ஏ.ஒ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!!

பொறையார் வி.ஏ.ஒ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பட்டா விண்ணப்பம் பரிந்துரை செய்ய ரூ 2500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி நாகலெட்சுமி என்பவர் பட்டா கேட்டு பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

அதனை பரிந்துரை செய்ய காழியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலரும் பொறையார் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலருமான. பாண்டியராஜ் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2500 விஏஒ பாண்டியராஜ் பெற்றபோது மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து பொறையார் விஏஓ அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு பாண்டியராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts