ITamilTv

April 10 Gold Rate : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!!

April 10 Gold Rate

Spread the love

April 10 Gold Rate : மாத தொடக்கத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ 53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.

மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.

அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.

மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.

April 10 Gold Rate

இதையும் படிங்க : நிதிமோசடியில் ஈடுபட்டுள்ள பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக – முத்தரசன்!

நேற்று (09.04.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,670-க்கு விற்பனை செய்யபட்டது.

மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,705-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (09.04.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,464க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,492-க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,936-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வெள்ளி விலை அதிரடியாக வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது (April 10 Gold Rate)

இதையும் படிங்க : DMK-வால் தமிழ்நாடு திண்டாடுகிறது! VIRUDHUNAGAR-க்கு எனது வாக்குறுதி! – RADHIKA SARATHKUMAR EXCLUSIVE


Spread the love
Exit mobile version