ஏ ஆர் ரகுமானின்(ar rahman) இசை நிகழ்ச்சியை சரியாக கையாளாததால் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை ஈசிஆரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கொள்வதற்காக 40 ஆயிரத்திற்கும் ஏற்பட்டவர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஞாயிறு மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் நள்ளிரவை தாண்டியும் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படவில்லை. மேலும் அந்த நிகழ்ச்சியில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது.
இது மட்டுமல்லாமல் ஈசிஆர் வழியாக சென்ற முதலமைச்சர் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் மாற்று பாதையில் முதலமைச்சரின் வாகனம் செல்லும் நிலை ஏற்பட்டது.இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இத்தனை தொடர்ந்து ,தாம்பரம் ஆணையார் அமல் ராஜ் ECR ல் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டர்.ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் சரியாக கையாளத காரணத்திற்க்காக பள்ளிக்கரணை தாம்பரம் சட்டஒழுங்கு துணை கமிஷனர் தீபா சத்யன் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் 20000பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 40000 மேற்பட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனத்தின் மீது actc நடவடிக்கை எடுக்காததால் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடடவடிக்கை எடுத்து குறிப்பிடத்தக்கது.