இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் மகள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் அவருடன் பணிபுரிந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா என்பவருக்கும் ரியாஸ் என்பவருக்கும் கடந்த 29-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் எனக்கும் ரியாஸ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய நிச்சயதார்த்தம் நடந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்த நிச்சயதார்த்தத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும் இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஏஆர் ரஹ்மான் தன்னிடம் பணிபுரிந்த ஒருவரையே தனது மருமகனாக்கி உள்ளார் என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.