பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன்7100 கோடி சொத்தை சார்பதிவாளர் மூலம் மோசடி செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு. வருவாய் துறை அலுவ வர்கள் சேர்ந்து சென்னை ஆற்காட் ரோட்டில் கிட் டத்தட்ட 3100 கோடி மதிப்புள்ள சொத்தை ராதாபுரம் சார்பதிவாளர் மூலம் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல் துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு மார்ச் மாதம் 12ம் தேதி அனுப்பியதாக தெரிவித்தது.
மேலும் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுஇந்த புகாரை விசாரித்த திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தற்போது அமைச்சர் மூர்த்தி இந்த புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்த நிலையில்,அறப்போர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து இந்த பதிவை ரத்து செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று திருநெல்வேலி துணை பதிவித்துறை தலைவர் அறிக்கை அளித்து 45 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இது வரை திமுக அரசு இந்த மோசடி பதிவை ரத்து செய்யவில்லை. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது FIR போடவில்லை. ஏன்?
திமுக அரசுக்கும் தமிழக பாஜக MLA மகனுக்கும் என்ன டீல்? எதற்காக இந்த மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள்? அமைச்சர் மூர்த்தி மற்றும் ஜோதி நிர்மலாசாமி IAS நடவடிக்கை எடுப்பதாக சொல்லிய 15 நாட்கள் கெடு இன்றுடன் முடிவடைகிறது.
மோசடி இங்கே, நடவடிக்கை எங்கே? என குறிப்பிட்டுள்ளது. பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறப்போர் இயக்கம் மோசடி புகார் அளித்துள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.