தமிழ்நாடு, இன்னும் சாதி எதிர்ப்பால் அரசியல் மாற்றத்தைக் கண்ட சமூக மாற்றத்தைக் கண்டடையவில்லை – பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டம், சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த வியாழக் கிழமையன்று கோவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அப்பொழுது, அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கோவிலுக்குள் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான மாணிக்கம் அடுத்த நாள் காலையில் பிரவீன் மற்றும் அவரது தாய் தந்தை அனைவரையும் ஊர் பொதுமக்கள் மத்தியில் நிற்கவைத்து அநாகரீகமாகவும், முகம் சுளிக்கும் வார்த்தைகளாலும் பேசியுள்ள வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை அதிரடியாக கைது செய்தது.
இந்த நிலையில் சேலத்தில் கோயில் கருவறைக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
”அதில், பெரியார், அண்ணா ஆகியோர் முன்வைத்த பிராமண மற்றும் சாதி எதிர்ப்பால் அரசியல் மாற்றத்தைக் கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூக மாற்றத்தைக் கண்டடையாமல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார், அண்ணா முன் வைத்த பிராமன&சாதி எதிர்ப்பில் அரசியல் மாற்றத்தை கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூகமாற்றத்தை கண்டடையாமல் இருக்க காரணம் என்ன? உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூகதளத்தில் வேறு வேறா? திமுக ஆட்சியில் தொடரும் சமூக அநீதி!!!
— pa.ranjith (@beemji) January 30, 2023
தொடர்ந்து, ஒரு பக்கம் பட்டியலின மக்களுக்குக் கோயில் திறப்பு, மற்றொரு பக்கம் பட்டியலின இளைஞர் கோயிலுக்கு நுழைவது பெரும் குற்றம் எனத் தீண்டாமை கொடுமைகள் தொடர்வதாகவும், திமுக ஆட்சியில் சமூக அநீதி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரியார், அண்ணா முன் வைத்த பிராமன&சாதி எதிர்ப்பில் அரசியல் மாற்றத்தை கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூகமாற்றத்தை கண்டடையாமல் இருக்க காரணம் என்ன? உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூகதளத்தில் வேறு வேறா? திமுக ஆட்சியில் தொடரும் சமூக அநீதி!!!”
மேலும் “உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூக தளத்தில் வேறு வேறா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.