ITamilTv

அநீதி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!

Spread the love

தனது கந்தர்வ ககுரலால் ரசிகர்களை தன்வசப்படுத்திய அர்ஜூன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில், உருவான அநீதி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி , மாஸ்டர் ,விக்ரம் ,உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அர்ஜூன் தாஸ் இவர் கதாநாயகனாக நடித்து அண்மையில் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் அநீதி.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், டி.சிவா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படமா கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 2 மாதம் ஆன நிலையில் தற்போது ஓடிடி-யிலும் வெளியாக ஆகா உள்ளது. மேலும் இதுகுறித்த சிறப்பான தரமான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி வரும் செப்டம்பர் 15-ம் தேதி, நாளை ஆஹா ஓடிடி தளத்திலும், அமேசான் ஓடிடி தளத்திலும் அநீதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version