”திமுகவை டிஸ்மிஸ் செய்..”மத்திய அரசே தமிழகத்தை காப்பாற்று..!-கொளுத்தி போட்ட அர்ஜுன் சம்பத்

தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அர்ஜுன் சம்பத்(arjun sampath) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சித் தலைவர்அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் வெடிகுண்டு விசபட்டது குறித்த கேள்விக்கு ,

தமிழகத்தில் தேசிய தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த வரலாற்றை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று ஆளுநர் கூறியது சரியானதுதான்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலஸ்தீன ஆதரவு என்ற பெயரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஆளுநர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

நவ.1-ல் சென்னையில் தமிழ்நாடு தினம் இந்து மக்கள் கட்சி சார்பில் கொண்டாடப்படுகிறது. அன்று திராவிட கருத்தியல் ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளோம்” என்றார்.

Total
0
Shares
Related Posts