நெல்லை படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது .
நீதிமன்ற வாசலில் மக்கள் கூட்டம் நிறைந்தும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போதும் துணிச்சலாக இந்த கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்திய 7 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் ஏறி மாயமான.
இந்த கொலை சம்பவத்தை நிகழ்திய குற்றவாளிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக்கி தகவல் வெளியாகி உள்ளது.