ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு எழும்பூர் நீதிமன்றம் 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி அவர் புதிதாக கட்டிவரும் வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசின் பிடியில் இருந்து தப்பித்தபோது என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டார்.
Also Read : தகுதி வாய்ந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு அந்த மாதமே ஊதியம் – அண்ணாமலை வலியுறுத்தல்..!!
இதையடுத்து இந்த கொலை வழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் சம்மந்தப்பட்டுள்ளதாக இந்த வழக்கு இன்னும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு எழும்பூர் நீதிமன்றம் 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியுள்ளது.
இதேபோல் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதுபடும் பொன்னை பாலு, ராமு என்ற வினோத், வழக்கறிஞர் அருள் ஆகியோருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியுள்ளது.