ITamilTv

London Oxford University| ”London ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் தேர்தல்…”அசத்திய இந்திய மாணவி..!!

Spread the love

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு இந்திய மாணவி பாஷின பாத்திமா வெற்றி பெற்றுள்ளார். 
லண்டன் ஆக்ஸ்போர்ட் புருக்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தேர்தல் மார்ச் 6ம் தேதி முதல் 9ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு இந்திய மாணவி பாஷின பாத்திமா போட்டியிட்டு இருந்தார்.
இவர்  தேசிய தலைவர் திரைப்பட நாயகன் பஷீர் அவர்களின் மூத்த மகள் தான் பாஷின பாத்திமா.லண்டன் ஆக்ஸ்போர்ட் புருக்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஒரே இந்திய மாணவி ஆவார்.
இந்த நிலையில் இன்று ( மார்ச் 11 )நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  1364 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து பாஷின பாத்திமா (மிஸ் இந்தியா 2020)  துணைத் தலைவர்
(VP)பதவிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் IBM படித்து வரும் இவர் பள்ளிப் படிப்பைச் சென்னை ஆழ்வார் திருநகர் சென்ட் ஜான்ஸ் பள்ளியிலும், கல்லூரி படிப்பை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியர்கள் மட்டுமல்லாது பிற நாடுகளிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்கள் இவருக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்கள். மிகவும் பிரபலமான மாணவியாக பாஷினிபாத்திமா இருப்பதால் இந்த வெற்றி அவருக்குக் கிடைக்குமென்று தொடக்கத்திலேயே பேசப்பட்டது.
இது குறித்து பாஷினிபாத்திமாவிடம் இந்த வெற்றியைப் பற்றிக் கேட்ட போது நான் இந்தியன் குறிப்பாகத் தமிழ்நாடு அன்பு,பண்பு ,வீரம் மூன்றும் கலந்த கலாச்சாரம் உள்ள தமிழ்நாட்டுப் பெண் என்பதால் எனக்கு அனைவரும் வாக்களித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக எனது பெற்றோர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள் அவர்களுக்கும் நன்றி சாதிக்க வேண்டும் என்று வாழ்கிறோம் என்று கூறினார்.

Spread the love
Exit mobile version