Site icon ITamilTv

நடுவானில் படீரென திறந்த விமான கதவு..அடுத்து நடந்தது என்ன…?

Spread the love

தென்கொரியாவில்(South Korea) 200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஏசியான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சியோல் நகரில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டேகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது.

விமானம் சுமார் 650 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் அவசர கால கதவு ஒன்றை பயணி ஒருவர் திடீரென திறந்து விட்டார். நடுவானில் திடீரென கதவு திறக்கப்பட்டதால் ராட்சச வேகத்தில் காற்று உள்ளே புகுந்தது. இருக்கைகளின் துணிகள் பறந்தன. பல பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பெரிய அளவு சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அச்சத்தில் கூக்குரல் இட்டனர்.

பெரிய பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் 9 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அவசரகால கதவுக்கு அருகே அமர்ந்திருந்த பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடுவானில் விமானத்தின் கதவு திறந்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version