அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடி கடந்த வாரம் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சூது கவ்வும் படம் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், அந்த படத்தை தொடர்ந்து தெகிடி, பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அமீபத்தில் திரை அரங்குகளில் வெளியான போர் தொழில் திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் கடந்த வாரம் திருநெல்வேலியில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை இவர்கள் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, நடிகர்கள் சாந்தனு, கலையரசன், ஹரீஷ் கல்யாண், ஆர்யா, மற்றும் நடிகைகள் ஜனனி, மஞ்சிமா மோகன், வாணி போஜன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.