ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

அனல் பார்க்க நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் விளையாட்டின் விதிமுறைப்படி இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை எட்டி பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மொத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களுக்கு முன்னேறு அணிகள் இறுதி சுற்றை அடையும் .

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 3-வது லீக் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மல்லுக்கட்ட உள்ளது கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது .

4 ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த அனல் பறக்கும் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

Total
0
Shares
Related Posts