ITamilTv

ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

Spread the love

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்ட உள்ளது.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் விளையாட்டின் விதிமுறைப்படி இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடியது .

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை எட்டி பிடித்த அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்று தற்போது விளையாடி வருகிறது .

அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின இதில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி இலங்கை அணியை வீழ்த்தி கெத்தாக இறுதி போட்டிக்கு முன்னேறியது .

இதையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மல்லுக்கட்ட உள்ளது .

இன்று மாலை 3 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் . அனல் பறக்க நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் 17ஆம் தேதி இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த அனல் பறக்கும் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version