பங்களாதேஷ் நாட்டில் நடைபெற இருக்கும் ஆசிய கடற்கரை கைபந்து போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழக வீரர்,வீராங்கனைகளுக்கான பயணச்செலவை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ஏற்றுள்ளது.
பங்களாதேஷ் நாட்டில் வரும் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மத்திய ஆசிய கடற்கரை கைபந்து போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கைபந்து வீரர்கள் ர.ராபின், எஸ்.பரத், வீராங்கனைகள் டி.ஜனனி, எஸ்.பவித்ரா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த வீரர் – வீராங்கனையர் மற்றும் ஒரு பயிற்சியாளர் பங்களாதேஷ் செல்வதற்காக விமான கட்டணம், விசா செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்காகத் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 720-ஐ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் .
இதையடுத்து பங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி வாழ்த்தினார்.