ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில், டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி இணை முதல் முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் கடந்த 25 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள வீரர் வீராங்கனைகள் தங்களது திறமைகளை உலகிற்கு காட்டும் வகையில் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் .

அந்தவையில் ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில், டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய அணி முதல் முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் அஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி இணை அபாரமாக ஆடி வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

இதே போல் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 400 மீட்டர் தடை தாண்டுதலில் 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்து வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார் . 1984 ஒலிம்பிக் தொடரில் 55.42 விநாடிகளில் பி.டி.உஷா இலக்கை கடந்தது தேசிய சாதனையாக இருந்தது.

இதேபோல் மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மகளிர் 100 மீட்டர் தடையோட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பந்தய தூரத்தை 12.91 நொடிகளில் கடந்து வெண்கலத்தை கைப்பற்றினார்.

1,500 மீட்டர் ஓட்டப் பந்தயம் மகளிர் தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Total
0
Shares
Related Posts