ஆசிய விளையாட்டு போட்டிகள் : பதக்கங்களை வென்று குவிக்கும் இந்திய வீரர்கள்..!!

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் கடந்த 25 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இதுநாள் வரை நடைபெற போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர் வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் .

இதில் 10மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. யஈஷா, திவ்யா, பாலக் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் ராம்குமார் ராமநாதன், சாகேத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் ச்ரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம்ப்பதக்கம் வென்றது நடப்பு ஆசிய விளையாட்டில் இது இந்தியாவின் 7வது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts