19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் கடந்த 25 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான கோல்ஃப் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் முதல் பெண் கோல்ஃப்பர் என்ற பெருமையை அதிதி அசோக் பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ட்ராப் பிரிவில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான், கினான் சென்னாய், ஜோரவர் சிங் சந்து ஆகிய மூவரணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இதேபோல் மகளிருக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ட்ராப் பிரிவில் இந்தியாவின் மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக், ராஜேஸ்வரி குமாரி ஆகிய மூவரணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
