சீனாவில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் ஆடவருக்கான ஈட்டி எரிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஈட்டி எறிதலில் 73.29 மீட்டர் தூரத்திற்கு எறிந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றது மட்டுமில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார் இந்திய வீரர் சுமித் அன்டில்.
அனல் பறக்க நடைபெற்று வரும் இந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 10 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 17 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ள 303 வீரர் – வீராங்கனைகள் பதக்கங்கள் பல வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திட அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.