சீனாவில் நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் வீராங்கனைகள் தங்களது பதக்க பட்டியலை தொடங்க ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் – தங்கம் வென்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு – வெள்ளி வென்றும் ராம்சிங் – வெங்கலம் வென்றும் அசத்தியுள்ளனர் . மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அண்மையில் சீனாவில் நடந்து முடிந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்தது மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்தனர் .
இந்நிலையில் நேற்று தொடங்கியுள்ள ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்கள் பல வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.