“நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. பகீர் பின்னணி..!!

சினிமாவில் பெரிய நடிகையாகிவிட வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்த இளம்பெண் ஒருவர், விபச்சார கும்பலிடம் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் வாழ்க்கையையே இழந்துள்ளார். அவரை தற்போது போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நள்ளிரவில் “என்னை விட்டுவிடுங்கள்” என்று பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் அந்த பெண் அழுதுகொண்டே கெஞ்சுவது அக்கம்பக்கத்தில் வசிப்போருக்கு கேட்ட நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் இளம்பெண் ஒருவர் “என்னை விட்டுவிடுங்கள்” என்று அலறும் சத்தம் கேட்பதாகவும், இதனால் அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்திய போது அந்த வீட்டில் இளம் பெண்ணை விபச்சார தொழிலில் வற்புறுத்தி ஈடுபட செய்வதாக சந்தேகம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி விபச்சார தடுப்பு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதையடுத்து, கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் விபச்சார தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்த தனிப்படை போலீசார், பொதுமக்கள் கூறிய அந்த குறிப்பிட்ட வீட்டை முற்றுகையிட்டு திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் வீட்டில் உள்ள அறை ஒன்றில் இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அந்த பெண், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார் என்பதும், அதன் பின் விபச்சார கும்பலிடம் சிக்கி அந்த பெண்ணின் வாழ்வு சீரழிக்கப்பட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், அந்த பெண் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அந்த பெண்ணை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியதாக 35 வயதுடைய காளிதாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts