Assam CM-ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பிரச்னையை ஏற்படுத்துவதற்காகவும் படத்ரவா கோயிலில் நுழைய ராகுல் காந்தி முயற்சி செய்வதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
முதல்கட்ட யாத்திரைக்கு “பாரத ஒற்றுமை யாத்திரை” என பெயரிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயணத்துக்கு “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என பெயரிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கிய இந்த நடைப்பயணம் நாளுக்கு நாள் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் நகோன் நகரில் உள்ள துறவி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் வழிபாடு நடத்த சென்றார்.
இதையும் படிங்க :http://Annamalai -”ஜல்லிக்கட்டு தடை..” காரணம் ஒட்டுண்ணி மாடல் திமுக தான்!
ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ராகுல்காந்திக்கு அந்த கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர்களுடன் வாக்குவாதம் செய்த ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது அசாம் காவல் துறையினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசாம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பிரச்னையை ஏற்படுத்துவதற்காகவும்,
படத்ரவா கோயிலில் நுழைய ராகுல் காந்தி முயற்சி செய்வதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750385175975141876?s=20
இது சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் முதலமைச்சர்,” ஹிமந்தா பிஸ்வா சர்மா “யாத்திரையின் போது ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டது.
தொண்டர்களை தூண்டியது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
தற்பொழுது ராகுல் காந்தி மீது தேர்தலுக்கு முன் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தேவையற்ற விமர்சனத்தை ஏற்படுத்தும்.
மேலும் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பிரச்னையை ஏற்படுத்துவதற்காகவும் படத்ரவா கோயிலில் நுழைய ராகுல் காந்தி முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் ரக்து காந்திக்கு எதிராக ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதாகவும் மக்களவை தேர்தலுக்கு பின், அவரை கைது செய்வோம் என்று(Assam CM)அஸ்ஸாம் முதலமைச்சர் தெரிவித்தார்.