ஹரியானாவில் காரில் பசுவைக் கடத்திச் செல்வதாக நினைத்து பசு பாதுகாப்பு குண்டர்கள் 12ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கடந்த 23ம் தேதி இரவு, யாரோ பசுவை கடத்திச் செல்வதாக பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு தகவல் வந்துள்ளது.
அப்போது ஆர்யன் என்ற 12ஆம் வகுப்பு மாணவன் சென்ற காரில் தான் பசு கடத்தப்படுகிறது என நினைத்து பசு பாதுகாப்பு குண்டர்கள் சுமார் 25 கி.மீ வரை அந்த காரை வேகமாக துரத்திச் சென்றுள்ளனர்.
Also Read : பாரிஸ் பாராலிம்பிக் : 3ஆவது முறையாக பதக்கம் வென்றார் மாரியப்பன்..!!
மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட அந்த குண்டர்கள் பின்னாடி சென்றவாறே காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர் .
இந்த தாக்குதலில் துப்பாக்கி குண்டு ஆர்யனின் மார்பில் பாய்ந்து அவர் சம்பவ இடத்தியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
12 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.