தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பாரத்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரத் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பின்னால் அமர்ந்திருந்த சிறுவனை அழைத்து முன்னாள் வந்து உட்காரும்படி ஆசிரியர் பாரத் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் எழுந்து வரும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் பாரத்திடம் அந்த மாணவனின் பெற்றோர் முனியசாமி ,தாய் செல்வி மற்றும் சிறுவனின் தாத்தா – பாட்டி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி பள்ளி வளாகத்திற்குள் அவரை ஓட ஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மாணவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.