சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சூடானின் எல் ஃபஷர் நகரத்தில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ; 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Also Read : வடிவேலு பட பாணியில் 4 பேரை திருமணம் செய்த பெண் கைது..!!
சூடானில் உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்த ஒரேயொரு மருத்துவமனை மீது தாக்குதல் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை மீது துணை ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக புகார் தெரிவிக்கப்படும் நிலையில் அந்நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் இந்த உள்நாட்டு போரில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.