August 17 Gold Rate : இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
இதையும் படிங்க : சென்னை கடற்கரை – எழும்பூர் இரவு நேர மின்சார ரெயில்கள் நாளை ரத்து!!
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
நேற்று (16.08.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,520க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (17.08.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (16.08.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,378க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,024க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (17.08.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.86 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,464க்கும், சவரனுக்கு ரூ.688 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89.00க்கும் ஒரு கிலோ ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும் ஒரு கிலோ ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது (August 17 Gold Rate).