தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ள கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள லூர்துராஜ் என்ற ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார் வைரமுத்து .
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து கூறிருப்பதாவது :
லூர்துராஜ்
ஓர் ஆட்டோ ஓட்டுநர்
‘கவிப்பேரரசு வைரமுத்து
திரைப்பாடல்களில்
புதுக்கவிதைக் கூறுகள்’
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்
வியந்து போனேன்;
வீட்டுக்கழைத்துப்
பாராட்டினேன்
ஆட்டோ ஓட்டுநர்
கூட்டத்தில் ஓர் அதிசயம்
வாழ்த்துகிறேன். என தனது ட்விட்டர் பதிவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுவரை எத்தனையோ பேர் பல வித படிப்புகளில் ஆர்வம் கொண்டு அது குறித்த ஆராய்ச்சிகளில் மேற்கோடு டாக்டர் பட்டம் பெற்றதை பார்த்திருக்கோம் ஆனால் ஒரு ஆட்டோ ஓட்டுநர் பாடல் மற்றும் அதன் கவி நயந்தின் மேல் உள்ள ஆர்வத்தாலும் காதலாலும் அதனை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள நிகழ்வு சற்று வியப்படைய செய்துள்ளது .