ITamilTv

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டீசர் – இன்று மாலை ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

Spread the love

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7.08 மணிக்கு வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 21வது படமான அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங், பைனான்ஸ் பிரச்சினை உட்பட பல காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அயலான் திரைப்படத்தில் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படம் இந்திய சினிமாவின் முதல் ஏலியன்ஸ் படமாக உருவாக்கப்படுகிறது.

அயலான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது
முன்னதாக அக்டோபர் 6ம் தேதி அயலான் டீசர் வெளியாகும் என அறிவித்திருந்த படக்குழு, தற்போது இன்று இரவு 7 மணி 8 நிமிடங்களில் அயலான் டீசர் வெளியாவதாக அறிவித்துள்ளது.

மேலும் அயலான் டீசர் சன் டிவியின் யூடியூப்பில் வெளியாகும் என்பதையும் படக்குழு குறிப்பிட்டுள்ளது. நாளை மாலை வெளியாகவுள்ள அயலான் டீசருக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Spread the love
Exit mobile version