கஜகஸ்தான் விமான விபத்திற்கு ரஷ்யாவே காரணம் என அந்நாட்டு அதிபர் இல்ஹாம் அலியேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யா நோக்கி இன்று சென்றுகொண்டிருந்தது அப்போது அந்த விமானம் உடனடியாக தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் விமானம் தரையிறங்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
Also Read : காமுகன் ஞானசேகரனை காவலில் எடுக்கும் போலீஸ்..!!
இதையடுத்து கஜகஸ்தான் நாட்டில் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தரையிறக்கும் போது விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது .
இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்திற்கு ரஷ்யாவே காரணம் என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எங்கள் நாட்டு விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது; ஆனால், வேண்டுமென்றே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நாங்கள் கூறவில்லை . கஜகஸ்தானில் அஜர்பைஜான் விமானம் விழுந்து நொறுங்கியதில், 46 பேர் உயிரிழந்த நிலையில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தற்போது பெரும் பேச்சு பொருளாகி வருகிறது.