பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் மீண்டும் விலகியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக பெரிய அளவில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு புதிய அணியை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
Also Read : இலங்கை அரசைக் கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு..!!
இதன்காரணமாகவே கம்பீர கேப்டனாக இருந்து வந்த பாபர் அசாம் 3 வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். இதையடுத்து அவர் டி20 உலகோப்பை தொடரில் அவர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் மீண்டும் விலகியுள்ளார்.
கேப்டன் பதவி, எனக்கு கூடுதல் பணிச்சுமையை தருகிறது. இதனால், எனது பேட்டிங் பாதிக்கப்படும் என்ற கவலை இருக்கிறது. ஆகையால், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இனி, ஒரு வீரராக அணியில் தொடர்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.