பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை ஒன்று தலையைத் தூக்கிக் கொண்டு தவழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொதுவாக, குழந்தைகள் பிரசவத்திற்குப் பிறகு தங்கள் தாயின் கருப்பைக்கு வெளியே வந்தவுடன் தங்கள் வாழ்க்கையைப் பழகுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்கின்றனர். அப்படி சில குழந்தைகள் தங்கள் கண்களைத் திறக்க கூட நேரம் எடுக்கும் போது, ஒரு குழந்தை பிறந்து 3 நாட்களிலேயே தலையை தூக்கி தவழ ஆரம்பிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் திகைக்க வைக்கிறது.
அந்த வீடியோவில், 3 நாட்களே ஆன குழந்தை தன் தலையை உயர்த்த முயற்சி செய்து அதில் வெற்றி பெறுகிறது. குழந்தை தனது கைகள் மற்றும் கால்களின் உதவியுடன் சிறிது தவழவும் செய்கிறது.
இதுகுறித்து அந்த குழந்தையின் தாய் சமந்தா குழந்தை தலை தூக்கி தவழும் வீடியோவை வெளியிட்டு, “இது நடந்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவை எடுத்துக் கொண்டே சமந்தா இது உண்மைதானா? என்று அவரது தாயிடம் கேட்பதும், அதற்கு அவருடைய தாய், எனக்கும் இது வியப்பாக தான் உள்ளது என்றும் கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த வேடசியோவைப் பார்த்த இணையவாசிகள், குழந்தைகள் உணவைத் தேடும்போது இதுபோன்று நகர்வது இயல்பானது என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.