ITamilTv

“தமிழகத்தில் வரும் 29 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்” காஜி சலாஹீதீன் முகமது அயூப் அறிவிப்பு..

Spread the love

தமிழகத்தில் வரும் 29 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார் .

உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிய மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை . ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும் .

பக்ரீத் அன்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிராத்தனை செய்து அல்லாவை வழிபட்டு புத்தாடை அணிந்து குர்பானி கொடுப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டுக்கான பக்ரீத் பண்டிகை குறித்து தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் ஆய்யூப் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறிருப்பதாவது :

ஹிஜ்ரி 144 நுல் கஃதா மாதம் 28ம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாதம் 19-06-2023 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை நாகூர்வில் காணப்பட்டது ஆகையால் செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 20-06-2023 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) வியாழக்கிழமை 29-06-2023 தேதி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version