Site icon itamiltv.com

ஏப்ரல் 21 முதல் 23 வரை மதுபான கடைகள் இயங்காது – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அனைத்து மதுபான கடைகள், கள் விற்பனை நிலையங்கள் மற்றும் சாராய விற்பனை நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த உத்தரவை மீறி கடைகள் திறந்து செயல்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் துறை விளக்கமளித்துள்ளது.

Exit mobile version