ஆப்கானிஸ்தானில் உள்ள வீடுகளில் ஜன்னல் வைக்க தடை விதித்து தலிபான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டின் போர் காரணமாக அங்கு ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் தற்போது அந்நாட்டை கடும் கட்டுப்பாடுகளுடன் ஆட்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கடமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கட்டாயம் பாரம்பரிய உடை அணிய வேண்டும் பொதுவெளியில் முகம் காட்ட கூடாதது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு போட்டுள்ள்ளது.
Also Read : ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரபல நடிகர்..!!
அதன்படி ஆப்கானிஸ்தானில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது மேலும் தற்போது உள்ள ஜன்னல்களை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதை ஆண்கள் பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்றச் செயலாகும் என தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.