பயிற்சியில் திடீரென மயங்கிய 42 ராணுவ வீரர்கள்… கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் சக்லேஷ்பூராவில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் மதிய உணவு சாப்பிட்ட ராணுவ வீரர்களுக்கு( indianarmy)வாந்தி ,மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் சக்லேஷ்பூர் அடுத்த குடுகரஹள்ளியில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,வழக்கம் போல் ராணுவ வீரர்களுக்கு(indianarmy) உணவு சமைக்கப்பட்டது. அதனைச் சாப்பிட்ட 35க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு வாந்தி ,மயக்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தகவல் அறிந்து வந்த உயரதிகாரிகள் மயங்கிய நிலையிலிருந்த ராணுவ வீரர்களை சக்லேஷ்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரி சட்டமன்ற உறுப்பினர் சிமென்ட் மஞ்சு கூறுகையில், குடுகரஹள்ளியில் உள்ள ராணுவ முகாமில் ஓட்டுநர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உணவுக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சுமார் 100 பேர் உணவைச் சாப்பிட்டதாகக் கூறினார். அவர்களில் 42 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் உட்கொண்ட உணவை ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts