ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நெரிசல் மிகுந்த நகரங்கள் பல உள்ளது என்றாலும் , மும்பை , பெங்களூரு , சென்னை உள்ளிட்ட நகரங்கள் பெரும் போக்குவரத்துக்கு நெரிசலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவை தாண்டி ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : வாழ்நாள் முழுவதும் இளமையாக இருக்க தாய்-மகன் எடுத்த விபரீத முடிவு..!!
பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தை கடப்பதற்கு 28 நிமிடங்கள் 10 நொடிகள் எடுத்துகொள்வதாக TomTom Traffic Index 2023 வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ள நாடாக லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் TomTom Traffic Index 2023 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.