வங்கதேசத்தின் முதல் அதிபரான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை கரன்சி நோட்டுகளில் இருந்து அகற்ற வங்கதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் ஏரளமான கலவரங்கள் வெடித்த நிலையில் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்.
இதையடுத்து சில நாட்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கதேசத்தை தற்போது இடைக்கால அரசு வழிநடத்தி வருகிறது.
Also Read : எனக்கு எண்டே கிடையாது – நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!!
இந்நிலையில் வங்கதேசத்தின் முதல் அதிபரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை கரன்சி நோட்டுகளில் இருந்து அகற்ற அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘வங்கதேசத்தின் தந்தை’ என ஷேக் முஜிபூர் போற்றப்பட்டு வந்த நிலையில், அவரை அவ்வாறு கருதவில்லை என அண்மையில் இடைக்கால அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.