BB 7 தாழ்ப்பாள் மேட்டர்..
விஜய் டிவியின் பிரபலமான ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஏழாவது சீசன் நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை விசித்ரா கூறியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 7வது சீசனில்,
ஆரம்பத்திலிருந்து டைட்டில் பட்டதை தட்டி செல்ல வேண்டும் என பல பிளான்களோடு விளையாடிய மாயா பைனல்சில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
பழநி கோவில் வழிபாடு : மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பு.. வைகோ!
அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது இடத்தை மணிச்சந்திரா தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் இருந்து பிரதீப் ஆண்டனி ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து நேற்று நடிகை விசித்ரா லைவில் ரசிகர்களிடம் பேசிஉள்ளார்.
அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விசித்ரா,
பிரதீப் சிலரால் கார்னர் செய்யப்பட்டு பிளான் செய்து வெளியேற்றப்பட்டார் எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு பிரதீப்பிடம் நீங்கள் பேசினீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த விசித்திரா, ஆமாம் நான் பிரதீப் ஆண்டனியுடன் பேசினேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் பிரதீப் மீது சுமத்தப்பட்ட டாய்லெட் தாழ்ப்பாள் குறித்த குற்றச்சாட்டிற்கு என்ன காரணம்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள விசித்ரா, ஸ்மால்பாஸ் ஹவுஸிற்குள் இருக்கும் டாய்லெட்டில் தாழ்ப்பாள் இல்லை.
இதை நானே பலமுறை கேமரா முன் கூறி அதை சரி செய்ய வேண்டும் என கேட்டு இருக்கிறேன். ஆனால், அவர்கள் அதை கடைசிவரை செய்யவே இல்லை.
இந்த சூழலில் நான் பாத்ரூம் போகும்போதோ அல்லது குளிக்க செல்லும்போதும் அனைவரிடமும் சென்று சொல்லிவிட்டு தான் அங்கிருந்து செல்லும்நிலை இருந்தது.
இது குறித்து பிரதீப் கூட என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
அது மட்டுமில்லாமல் தாழ்ப்பாளை ஏதோ ப்ளான் பண்ணி தான் எடுத்துட்டாங்க என்றும், இதனால் பிரச்சனை வரக்கூடும் என்றும் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், இது அவருக்கே பிரச்சனையாக முடியும் என தெரியவில்லை.
எது என்னவோ.. பிளான் பண்ணி தான் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி விட்டனர் எனக் கூறியுள்ளார்.
(BB 7 தாழ்ப்பாள் மேட்டர்) அதுமட்டும் அல்லாமல் இரவு முழுவதும் பிரதீப் தூங்காமல் இருப்பதால் பயமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரை வெளியே அனுப்பினர்.
ஆனால், உண்மையில் பிரதீப் நானும் தான் பிக்பாஸ் வீட்டில் சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருப்போம் என்று கூறியுள்ளார்.