தனிமையை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆராச்சியாளர்கள் பல ஆய்வுக்கு பின் கூறிருக்கும் செய்தி பலரையும் வியக்க வைத்துள்ளது.
இன்றைய கால இளசுகள் அதிகளவில் தனியாக இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர் . ஆனால் அவ்வாறு இருந்தால் கிடைக்கும் நன்மைகளுடன் ஏரளமான தீமைகள் தான் கிடைக்கிறது.
இந்நிலையில் தனிமையை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆராச்சியாளர்கள் பல ஆய்வுக்கு பின் கூறிருக்கும் செய்தி பலரையும் வியக்க வைத்துள்ளது.
Also Read : ஆவின் ஐஸ் க்ரீம் உங்களுக்கு வேணுமா – இத மட்டும் பண்ணுங்க போதும்..!!
தனிமையாக இல்லாமல் சமூகத்துடன் இணைந்து வாழ்வது மனநல ஆரோக்கியத்தை அளிப்பதுடன்
இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய் (TYPE 2) உள்ளிட்டவற்றை தடுக்கும் என ஆய்வில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தனிப்படுத்திக்கொள்வதன் மூலம் ஒரு சில புரதச்சத்துக்கள் குறைந்து அது உடல் நலனில் பிரதிபலிப்பதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் மற்றும் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. 42,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.