லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் நடிகர் விஜயின் 67வது படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் (bhagat basil) இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இது விஜய்யின் 67வது படம்.
இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகளின் பெயர்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகின்றன.
மேலும், இப்படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும், கதாநாயகியாக நடிக்க இருப்பதாக நடிகை திரிஷாவின் பெயர் அடிபட்டு வருகிறது.
இதனையடுத்து, தற்போது பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் (bhagat basil) விஜய்யின் 67வது படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இதுகுறித்து அவரிடம் விஜய் படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்கும்போது, அந்த படத்தில் நானும் இருக்கலாம்.. என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, பகத் பாசில் “வேலைக்காரன்” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சேதுபதியின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், கமல்ஹாசன் நடித்து வெளியான “விக்ரம்” படத்திலும் நடித்திருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய “புஷ்பா” படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது உதயநிதி நடிக்கும் படத்திலும் பகத் பாசில் நடித்து வருகிறார்.