பாடகி பவதாரிணியின் உடல் இறுதி சடங்கிற்காக (bhavatharini body) இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான பவதாரிணி இராமன் அப்துல்லா, தாமிரபரணி, பாரதி, புதிய கீதை உள்ளிட்ட திரைப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
அது மட்டும் இன்று இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் பவதாரிணி. பாரதி திரைப்படத்தில் இவர் இசை அமைத்த மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர், மற்றும் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பவதாரணியின் இறுதிசடங்கு இன்று மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்காக இலங்கையில் இருந்து பவதாரணியின் உடல் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது.
பாடகி பவதாரிணியின் உடல் (bhavatharini body) சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
இந்த நிலையில் பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : vijay makkal iyakkam -காய் நகர்த்தும் விஜய் : டெல்லி செல்லும் நிர்வாகிகள் !
அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின் சென்னை தியாகராய நகரில் இளையராஜாவின் இல்லத்தில் அவரது உடல் மாலை ஐந்து மணிக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அவரது உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இளையராஜா இல்லத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி மற்றும் இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், மாலை 5:30 மணி முதல் தி.நகர் முருகேசன் தெருவில் உள்ள இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த
நிலையில், அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.