தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் பணி அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது.
Also Read : தொடரும் போர் பதற்றம் – வான்வழி தடத்தை மூடியது ஈரான்..!!
கட்சியின் முதல் மாநாட்டிற்காக தவெக கட்சி நிர்வாகிகள் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன் பனையூரில் ஆலோசனை மேற்கொண்டார் .
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் பணி அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுநாள் வரை விஜய் திரைப்படங்களில் பல வசனங்களை பேசி பார்த்திருப்போம் ஆனால் முதல் முறையாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு அரசியல் தலைவராக மாநாட்டில் விஜய் பேச உள்ள நிலையில் இந்த மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.