பலகோடி பார்வையாளர்களை கவர்ந்த தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இன்று கோலகலமாக தொடங்குகிறது.
இரவு முழுவதும் இதற்கான சூட்டிங் நடைபெற்ற நிலையில் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றங்கள் இம்முறை பசுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக வீடு முழுவதும் பச்சை நிறங்களை கொண்டு கார்டன் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கமல் பேசிய பிக்பாஸின் புரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் மேலும் எதிர்பார்ப்பிற்கு அடித்தளம் அமைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிக்பாஸில் பங்கேற்பாளர்கள் கடந்த ஆண்டு வரை யார் என்று முன்கூட்டியே வெளியாகியிருந்தது.
ஆனால் இந்த சீசனில் யாரெல்லாம் பங்கேற்பாளர்கள் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் திணறும் அளவிற்கு சஸ்பென்ஸ் வைத்து எதிர்பார்ப்புகளுக்கு காரம் சேர்த்துள்ளது பிக்பாஸ் டீம்..
ஒவ்வொரு தடவையும் எதாவதொரு தீமை(theme)-ஐ மையமாக வைத்து, பிக்பாஸ் செட் அமைக்கப்படும். அந்த வகையில் இம்முறையும் பசுமையை மையமாக வைத்து செட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகமொத்தத்தில், பிக்பாஸ் சீசன் தொடங்கும் இந்நாள் பிக்பாஸ் பிரியர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.