Big Boss |இந்தியா முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் எடுக்கப்படும் படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இந்தியாவில் அவ்வப்போது நாம் ரீ-கிரியேட் செய்வது வழக்கம் .
அப்படி தான், ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட டெலிவிஷன் நிகழ்ச்சி தான் ‘பிக் பிரதர்’.
இந்த நிகழ்ச்சியில் திரை துறையை சார்ந்த பல்வேறு நபர்கள் ஒரே வீட்டில் வசிப்பர்.
இதனால் அவர்களுக்குள் பல சண்டைகளும் சர்ச்சைகளும் ஏற்படும். இந்த நிகழ்ச்சியை 2007ஆம் ஆண்டு இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஆரம்பித்தனர்.
அதன்படி இந்தியாவில் 100 நாட்களுக்கு மேல் ஒரே வீட்டில் இருக்கும் பலதரப்பட்ட நபர்களுக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்காது.
இதையும் படிங்க: bhagyaraj: குழந்தையை முதலையிடம் கொடுத்த தாய்! -பாக்யராஜ் பகீர் வீடியோ
அப்படி இருக்கையில் ஒரே வீட்டிற்குள் இருக்கும் குறிப்பிட்ட 15க்கும் மேற்பட்டோர் தங்களது உணர்வுகளை மாறி மாறி வெளிபடுத்துவதே பிக்பாஸ்.
அப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் பல காதல்கள் மலந்துள்ளது.
அதில் சில பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் தொடர்ந்ததும் உண்டு.பல காதல்கள் வீட்டிற்குள்ளே முடிந்ததும் உண்டு.
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளன.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1758100181893939299?s=20
அதேப்போல ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். ஹிந்தியில் இதுவரை 17 சீசன்களை தற்போது கடந்துள்ளது.
முன்னதாக ஹிந்தி பிக் பாஸ் (Big Boss) நிகழ்ச்சியில் 14வது சீசனில் போட்டியாளர்களாக நடிகர் ஐஜாஸ் கான் மற்றும் பவித்ரா போனியா கலந்து கொண்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி இருவரும் காதல் மலர்ந்தது . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் காதலர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது இரண்டு வருடங்கள் கழித்து தாங்கள் பிரிந்துவிட்டதாக நடிகை பவித்ரா கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.