இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டையில் இறங்கியுள்ள லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது…
லாஸ்லியா அவரது நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் தான் கடந்த 2019-ம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த சீசனில் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றார்.
இதனிடையே திறமையாக விளையாடி வந்த லாஸ்லியா, திடீர் என கவினின் காதல் வலையில் சிக்கினார். இதனால், விளையாட்டை விட இவர்களின் ரொமான்ஸ் கொஞ்சம் அதிகமாகவே காட்டப்பட்டது. மேலும், இவர்கள் இருவரின் பெயரையும் சேர்த்து “கவிலியா” எனவும் ரசிகர்கள் கொண்டாடினர்.
இதையெல்லாம் பார்த்து கடுப்பான லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிரீஸ் டாஸ்க்கின் போது லாஸ்லியாவை திட்டி தீர்த்தனர். இப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் காதலில் உருகிய இவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் கவின் யார் என்றே தெரியாதது போல நடந்து கொண்டார்.
அதன் பின்னர் ஃபிரெண்ட்ஷிப் படத்தில் கமிட் ஆகி நடித்தார். தற்போது ஓரிரு படங்களில் இவர் நடித்து வந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தற்போது எல்லைமீறி கவர்ச்சியை காட்டி பட வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில், தற்போது சல்லடை போன்ற புடவையை கட்டிகொண்டு, ஹாட் போஸ் சிலவற்றை இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து நெட்டிசன்கள் சிலர் இதுக்கு இந்த புடவையை கட்டாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம் என, கமெண்ட் செய்து வருகின்றனர்.