பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கும் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனால், இந்த சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வட இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமான நிலையில், அதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகார்ஜுனா ஆகியோரும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன் லாலும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
ஆனால், தென்னிந்திய மொழிகளில் மற்ற மொழி பிக்பாஸை காட்டிலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வந்தது. அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் தான் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிகழ்ச்சியில் மக்களின் குரலாக மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை எல்லாம் போட்டியாளர்களிடம் பாரபட்சமின்றி பட்டென கேட்டுவிடுவார்.
ஆனால், கடந்த சீசனில் அவர் எடுத்த சில முடிவுகள் தவறாகி அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தின. குறிப்பாக மாயா விஷயத்தில் அவரது செயல்பாடுகள். இதனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கமாட்டார் என கூறப்பட்டது.
இதையும் படிங்க : நாக சைதன்யாவிற்கு 2வது திருமணம் : இந்த நடிகை தான் மணமகள்!!
அதன்படியே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சினிமாவில் பிசியாக உள்ளதால் பிக்பாஸுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார் கமல்.
அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரது கேள்வியாக இருந்து வருவது, யார் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் என்பது தான்.
அந்த வகையில் நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் அடிபட்டு வந்தது. ஆனால் அதெல்லாம் வதந்தி என பின்னர் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தற்போதைய தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் தொகுப்பாளராக நடிகர் சரத்குமார் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரத்குமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள் பிக்பாஸ் வட்டாரங்கள்.