Site icon itamiltv.com

பிக் பாஸ் நேயர்களுக்கு கொண்டாட்டம் தான் ! சீசன் 9 எப்போனு தெரிஞ்சாச்சு…

bigg boss season 9

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழின் சீசன் 9 தொடங்கும் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் விஜய் சேதுபதி மீண்டும் தொகுப்பாளராகிறார்.

பார்வையாளர்கள் நிகழ்ச்சியைப் பின்தொடரக்கூடிய தேதி மற்றும் தளங்கள் இரண்டையும் உறுதிப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்களால் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் தமிழின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது மற்றும் டிஜிட்டல் தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் 24/7 நேரடி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பார்வையாளர்கள் 24 மணி நேரமும் நிகழ்ச்சியை ரசிக்க முடியும்.

https://www.instagram.com/p/DOih2eeAFUL/?utm_source=ig_web_button_share_sheet

முதல் ஏழு சீசன்களில் நடிகர் கமல் தொகுப்பாளராக இருந்தார். எட்டாவது சீசனை போல் இந்த சீசனிலும் நாய்க்கர் விஜய் சேதுபதி தொகுப்பாளராகிறார்.

இந்த சீசனுக்கான விளம்பரப் போஸ்டரயும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். .

யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்கிற குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

“பார்த்தால் நீங்கள் புரிந்துகொள்வீர்கள், ஆனால் அனுபவித்தால் மட்டுமே உண்மையிலேயே தெரியும்” என்கிற டக்லைனயும் சீசன் 9 காக வெளியிட்டுள்ளார்கள்.

Exit mobile version